என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு"
- சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரி டிரைவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கவினுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் கவின் தசூர். இவருக்கு வயது 29. கவின் 2016 முதல் அமெரிக்காவில் வசித்து வந்தார். 2018 இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த பிறகு, சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
இதனிடையே, மெக்சிகன் வம்சாவளியைச் சேர்ந்த சிந்தியா என்ற பெண்ணை கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கவின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16-ந்தேதி குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த கவின், மீண்டும் வீட்டுக்கு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முந்தி செல்வது தொடர்பாக லாரி டிரைவருக்கும், கவினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லாரி டிரைவர், கவின் மீது அவரது மனைவி கண்முன்னே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் கவின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசார் விசாரணை குறித்து குற்றம்சாட்டிய குடும்பத்தினர், லாரி டிரைவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கவினுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, ஜூலை 29 ஆம் தேதி கவின் இந்தியா திரும்புவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இப்போது அவரது தாயார் கவினின் சாம்பலை எடுத்துக்கொண்டு ஆக்ராவுக்குத் திரும்புவார் என்று குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர்.
- காயம் அடைந்தவர்களில் பலர் 20-க்கும் குறைந்த வயதுடையோர்.
- சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு விருந்துக்காக மக்கள் கூடியிருந்த நிலையில் சம்பவம் நடைபெற்றுள்ளது.
வாஷிங்டன் நகரின் மேற்கு பகுதியில் உள்ள டேவிஸ் தெருவின் 100-வது ப்ளாக் பகுதியில், நள்ளிரவு 12:22 மணிக்கு (உள்ளூர் நேரம்), நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக சைராக்யூஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் மேத்யூ மேலினோவ்ஸ்கி தெரிவித்தார்.
காவல்துறையின் தகவலை மேற்கோள்காட்டி பிரபல அமெரிக்க பத்திரிகை, இந்த நிகழ்வில் நான்கு பேர் சுடப்பட்டதாகவும், ஆறு பேர் கத்தியால் குத்தப்பட்டதாகவும், மேலும் மூன்று பேர் அந்த களேபரத்திலிருந்து வேகமாக வெளியேறிய வாகனங்களால் மோதப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 17-25 வயதுக்குட்பட்ட 3 பேர் ஆண்கள் என்றும், 10 பேர் பெண்கள் என்றும், காயமடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் மெலினோவ்ஸ்கி கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் காணப்பட்டதாகவும், அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுடப்பட்டவர்களில் 20 வயதுக்கு கீழ் உள்ள இளம்பெண்கள் மூவர் ஆவார்கள்.
சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு விருந்துக்காக மக்கள் கூடியிருந்தனர். ஒரு சிறிய கைகலப்பு தொடங்கி சற்று நேரத்தில் முடிவுக்கு வந்ததாகவும், அதன் பின்னர் 20 நிமிடங்களுக்குப் பிறகு மற்றொரு கைகலப்பு வெடித்ததாகவும், இதனைத் தொடர்ந்து டஜன் கணக்கான துப்பாக்கிச்சூடு சத்தங்கள் எழுந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட உடனேயே சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் மிகப்பெரிய அளவில் நடைபெற இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ஜாக்சன்வில் நகர் அமைந்துள்ளது. மதுபான விடுதிகள் அதிகம் உள்ள இந்நகரில் வார விடுமுறை தினங்களில் அதிகளவு கேளிக்கை நிகழ்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அதைப்போல அந்நகரில் உள்ள ஜாக்சன்வில் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் இன்று வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த கேம் விளையாட்டில், பல்வேறு நபர்கள் போட்டியாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், இரண்டு பேர் கேம் விளையாடுகின்றனர் அப்போது பின்னால் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. அதைத்தொடர்ந்து மக்கள் பீதியில் அலறும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில், ’கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர், தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்’ என தெரிவித்தார்.
I am literally so lucky. The bullet hit my thumb
— Drini Gjoka (@YoungDrini) August 26, 2018
புலோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 மாணவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. #Jacksonvilleshooting
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்